தேனி மாவட்டம் க. விலக்கு எஸ். ஐ பிரபா தலைமையிலான போலீசார் நேற்று (செப்.,19) ம. சுப்புலாபுரம் வாய்க்கால்பட்டி சாலையில் செம்மண் ஏற்றி வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் அரசு ஆவணங்கள் ஏதும் இல்லாமல் செம்மண்ணை கடத்தியது தெரியவந்தது. இதை அறிந்த டிரைவர், டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. பிறகு டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.