தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே பாலமுருகன் என்பவரது மகன் சீமானை கடந்த ஆண்டு கொன்று கிணற்றில் வீசியது தொடர்பாக கண்டமனூர் போலீசார் சஞ்சீவிகுமார், ஜெயபிரகாஷ் உட்பட 4 பேரை கைது செய்தனர். பிறகு ஜாமினில் வெளிய வந்த சஞ்சீவிகுமார், ஜெயபிரகாஷ் இருவரும் நேற்று (செப்.,19) பாலமுருகனை வழக்கை வாபஸ் பெற சொல்லி கத்தியைக் காட்டி மிரட்டியதாக பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.