தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேனி மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா மாவட்ட தலைவர் வேந்தர் பாலா ஆகியோர் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த மனுவில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் குன்னூர் அருகே உள்ள செங்குளம், கருங்குளம் ஆகிய கண்மாய் பகுதிகளில் அதிகளவு ஆக்கிரமிப்பு உள்ளது என்றும் , இதனால் அப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான பரப்பளவு உள்ள நிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை வருகிறது என்றும் , இதனை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பினை அகற்றி விவசாயிகளுக்கு உதவிட வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டது.
இதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் என்றும் இந்த கிராமத்தில் சாலை வசதி சாக்கடை வசதி தெரு விளக்கு வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது என்றும்மாதத்தில் சில நாட்கள் மட்டுமே உப்பு தண்ணீர் மட்டும் வருகின்றது என்றும் இதனால் இந்த பகுதிகள் வாழும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கூறி கோரிக்கை மனுவினை வழங்கினார்கள். மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய நபர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் கோரிக்கை மனுவினை வழங்கினார்கள்.