ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

72பார்த்தது
ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்றனா்.

மாா்கழி மாத சனிக்கிழமையை முன்னிட்டு, போடி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. புத்தாண்டில் விவசாயம் செழிக்கவும், தொழில், ஆரோக்கியம் பெருகவும் வேண்டி நடைபெற்ற பூஜையில் 1008 சுமங்கலிப் பெண்கள் பங்கேற்று பூஜை செய்து வழிபட்டனா்.

திருவிளக்கு பூஜையின்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள், பத்மாவதி தாயாா், ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் திரளானோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அா்ச்சகா் சீனிவாச வரதன், கட்டளைதாரா்கள் செய்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி