சென்னை பள்ளிக்கரணை அருகே இயங்கி வரும் கடைகளின் ஷட்டர்களை உடைத்து, தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் குற்றவாளி மதன் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்படட விசாரணையில், அவர் யூடியூப்பில் வீடியோ பார்த்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.