'யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை'

548பார்த்தது
'யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை'
தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக திமுகவை விமர்சித்து அறிக்கை விட்ட இபிஎஸ்க்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக எம்.பி டி.ஆர்.பாலு. அவர் கூறுகையில், பாஜகவால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் அதிகளவு பணத்தை பாஜகவுக்கு வாரி வழங்கி உள்ளது. பழனிசாமிக்கு, பாஜகவின் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட முதுகெலும்பு உண்டா?, யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் இபிஎஸ் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி