சென்னையில் நேற்று (அக். 14) இரவு முதல் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மயிலாப்பூர் பகுதியில் இன்று (அக். 15) நடுத்தர வயது பெண்ணொருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது தண்ணீரில் நிலைதடுமாறி விழுந்து மயங்கினார். இதனை தொடர்ந்து போலீசார் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.