நெல்லை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள மாநகரப் பகுதியாக உள்ளது கொக்கரக்குளம் பகுதி. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புனரமைக்கும் பணியானது நடைபெற்று வந்தது. இதில் சுவர்களுக்கு நீர் ஊற்று பணியின்போது, திறந்து கிடந்த மின்சார பேட்டியின் மீது நீர் விழுந்ததில், சுவர் முழுவதும் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதனை அறியாமல் வேலை பார்த்த ரவி, சஞ்சய் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.