வங்கக்கடலில் இன்று உருவாகும் புயல் சின்னம்.. வெளுக்கும் கனமழை!

54பார்த்தது
வங்கக்கடலில் இன்று உருவாகும் புயல் சின்னம்.. வெளுக்கும் கனமழை!
தென்மேற்கு வங்கக் கடலில் இன்று (மே 22) புயல் சின்னம் உருவாகிறது. இது வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, மே 24ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் 6 நாட்கள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று கர்நாடக, கேரள கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி