"மணிப்பூரின் நிலை நமக்கும் ஏற்படலாம்" - முதலமைச்சர் ஸ்டாலின்

66பார்த்தது
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதலமைச்சர், “மணிப்பூர் மாநிலம் கடந்த இரண்டு ஆண்டு காலமாக பற்றி எரிகிறது. அந்த நிலைமை நமக்கும் ஏற்படலாம். எனவே, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது என்பது நம்முடைய அரசியல் வலிமை குறைப்பு என்று பார்க்க வேண்டும். இது வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல, இது நமது அதிகாரம், நமது உரிமைகள் மற்றும் நமது எதிர்காலத்தின் நலன்களைப் பற்றியது” என்றார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி