ஐரோப்பா செல்ல விரும்புவர்களுக்கு அதிர்ச்சி

58பார்த்தது
ஐரோப்பா செல்ல விரும்புவர்களுக்கு அதிர்ச்சி
ஐரோப்பாவுக்கு பயணம் செய்ய விரும்புவோருக்கு ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சி அளித்துள்ளது. பெரியவர்களுக்கான ஷெங்கன் விசா விண்ணப்பக் கட்டணம் 80 யூரோக்களிலிருந்து 90 யூரோக்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு, 40 யூரோவில் இருந்து 45 யூரோவாக அதிகரித்துள்ளது. இது அடுத்த மாதம் 11ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷெங்கன் விசா என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் 29 நாடுகளுக்கு 90 நாட்களுக்குச் செல்ல வழங்கப்படும் விசா ஆகும்.