சென்னை முகப்பேரில் பிரபல நிறுவனமான கவின்ஸ் மில்க் நிறுவனத்தின் மில்க் ஷேக் பாக்கெட்டில் பல்லி ஒன்று அழுகிய நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மில்க் ஷேக்கை விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என யுவராஜ் என்பவர் கோரிக்கை வைத்துள்ளனர். பல்லி விழுந்த மில்க் ஷேக்கை குடித்த கல்லூரி மாணவியான யுவராஜின் மகள் மற்றும் அவரது மகனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.