சின்ன வெங்காயம் விலை அதிரடியாக குறைவு

56பார்த்தது
சின்ன வெங்காயம் விலை அதிரடியாக குறைவு
சமையலில் முக்கிய பங்கு வகிப்பது வெங்காயம். அதிலும் சின்ன வெங்காயத்தை தான் பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில் தற்போது சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.15க்கு விற்கப்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல் மொத்த வெங்காயம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் தரத்தை பொறுத்து ரூ. 15 முதல் ரூ.35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை இதுவரை இல்லாத அளவிற்கு 50 கிலோ எடை கொண்ட சின்ன வெங்காயம் 9,000 மூட்டைகள் விற்பனைக்கு திண்டுக்கல் மொத்த வெங்காய மார்க்கெட்டுக்கு வந்துள்ளது.
Job Suitcase

Jobs near you