ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதம் அதிரடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று (செப்.2) மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,670க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.53,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5464க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,712க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.91க்கும், கிலோ ரூ.91,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.