கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

83பார்த்தது
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
கேரள மாநிலத்தில் கடந்த மே 30-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடங்கியது முதலே மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 2) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல், வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாவட்டத்தின் சார்பாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி