மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி நிச்சயம்.. திருமாவளவன்

64பார்த்தது
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி நிச்சயம்.. திருமாவளவன்
ஜூன் 4ஆம் தேதி இந்தியாவை சூழ்ந்த இருள் அகல இருக்கிறது, புதிய வெளிச்சம் பிறக்க உள்ளது. இந்தியா கூட்டணியின் ஆட்சி மலர உள்ளது. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான புதிய விடியலாக ஜூன் 4-ம் தேதி நமக்கு மலர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் தாமரைக்கு வாய்ப்பே இல்லை, தாமரை மலர்வதற்கு தமிழ்நாட்டில் இடமே இல்லை. 40க்கு 40 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் என உறுதியாக கூறியுள்ளார்.