சாரப்பருப்பு இயற்கையாகவே உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மை கொண்டது. இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடு மற்றும் வீக்கத்தை குறைக்க நல்ல நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உட்பட ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இந்த பருப்பில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதோடு மட்டுமல்லாமல், கரும்புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்கவும் உதவி புரிகின்றது.