பாரிஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பிரிவில் சாத்விக் - சிராத் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. திங்களன்று ஜெர்மனி ஜோடிக்கு (மார்க்-மெர்வின்) எதிரான ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் இந்திய பேட்மிண்டன் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது. மேலும், ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய இரட்டையர் ஜோடி என்ற சாதனையை சாத்விக் - சிராக் ஜோடி படைத்தது. நாளை அவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுடன் போட்டியிடுகின்றனர்.