புதுச்சேரி துணைநிலை ஆளுநராக மலையாளியான கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் முதல்வரின் முதன்மைச் செயலாளராக 18 ஆண்டுகள் பணியாற்றிய இவர், ஜூன் 29ஆம் தேதி ஓய்வு பெற்றார். கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்த இவர், 1985ஆம் ஆண்டில் குஜராத்தின் சுரேந்திரநகர், 1987ஆம் ஆண்டில் சூரத் மாவட்டங்களின் ஆட்சியராகப் பணியாற்றினார். குஜராத் கடல் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார். பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.