தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது. வடக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சுறாவளிக் காற்று மணிக்கு 35-45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என அறிவித்துள்ளது.