நான் வரும்போது விளக்குகள் அணைக்கப்பட்டன

78பார்த்தது
நான் வரும்போது விளக்குகள் அணைக்கப்பட்டன
சென்னை வள்ளலார் நகரில் நடைபெற இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தடைந்தார். நிகழ்ச்சியில் பேசிய ஜே.பி.நட்டா, ஒரு சில நாட்களில் 234 தொகுதிகளிலும் பாஜக பாதயாத்திரையை நிறைவு செய்யும். மாநில அரசுக்கு மனசாட்சி ஜனநாயகம் இல்லை. நான் வரும்போது தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன. நான் வரும்போது கடைகள் மூடப்பட்டிருந்தன. இவை எமர்ஜென்சி போல் உள்ளது. ஊழலற்ற அரசை நாங்கள் நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி