தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று (ஜுன் 9) நடைபெறுகிறது. கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பை, டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி வெளியிட்டது.
இந்த நிலையில், இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் சென்று விட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும்.