தர்மபுரி மாவட்டம் மொரத்தூர் அருகே வசித்து வரும் பாஞ்சாலம் என்ற பெண் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் வழக்கம்போல அரூர் பகுதிக்கு மாட்டிறைச்சி எடுத்துக்கொண்டு விற்பனை செய்ய பேருந்தில் கிளம்பியுள்ளார். அப்போது அரசு பேருந்து நடத்துனர் என்ன எடுத்துட்டு போறீங்க என கேட்டுள்ளார். அதற்கு மாட்டிறைச்சி என கூறியுள்ளார். அதெல்லாம் பேருந்தில் எடுத்து வரக்கூடாது என அவரை வனப்பகுதியில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பாஞ்சாலத்தின் உறவினர்கள் அளித்த பேரில் நடுத்தனர் மற்றும் திரிவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.