இலவசமாக சன் ஸ்கிரீன் வழங்கும் நாடு (வைரல் வீடியோ)

68பார்த்தது
தோல் புற்றுநோயைத் தவிர்க்க அனைவரும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படி நெதர்லாந்தில் அதிகரித்து வரும் தோல் புற்றுநோயை சமாளிக்க, அரசாங்கம் நாடு முழுவதும் இலவச சன்ஸ்கிரீன் வழங்குகிறது. சன்ஸ்கிரீன் டிஸ்பென்சர்கள் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் பிற பொது இடங்களில் கிடைக்கின்றன. நம் நாட்டில் பொது இடங்களில் நீர், மோர் வைப்பது போன்று அந்நாட்டில் சன் ஸ்கிரீன் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி