கல்யாண முருங்கையின் இலைகள், விதைகள் மற்றும் மலர்களில் பல்வேறு வேதிப்பொருட்கள் உள்ளன. பெண்களுக்கு மாதவிடாய், கருப்பை சார்ந்து வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து காக்கக்கூடியது இந்த முருங்கை. இதன் இலைச் சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்கும். கல்யாண முருங்கையுடன் முருங்கை, மிளகு, பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ரத்தச்சோகை குணமாகும்.