“2026ல் நிச்சயமாக வெற்றி பெறுவோம்” - விஜய் நம்பிக்கை

54பார்த்தது
“2026ல் நிச்சயமாக வெற்றி பெறுவோம்” - விஜய் நம்பிக்கை
தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன.29) நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய கட்சியின் தலைவர் விஜய், “2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக வெற்றிப் பெறுவோம். மக்கள் இயக்கமாக இருந்த நேரத்தில் நீங்கள் நன்றாக பணியாற்றி வந்தீர்கள். தற்போது உங்களை நம்பியே கட்சி தொடங்கி உள்ளேன். கட்சிக்கு உண்மையாக, நேர்மையாக உழைக்க வேண்டும். மக்களுக்காகவே இந்த கட்சி, மக்களுக்காக நீங்கள் செயல்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.