பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர்

78பார்த்தது
பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர்
திமுகவை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கி விடுவேன் என்று தான் வகிக்கும் பதவியை தரம் தாக்கும் வகையில் பேசி உள்ளார் பிரதமர் மோடி. திமுகவை அளிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாடு வரலாறு என முதலமைச்சர் மு.க‌.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம். எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டித் திறப்பதற்குத் தடையாக இருந்தோமா. மெட்ரோ ரயில் திட்டங்களுக்குத் தடையாக இருந்தோமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி