சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை? - நீதிமன்றம் கேள்வி

32004பார்த்தது
சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை? - நீதிமன்றம் கேள்வி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்து விடுதலை ஆன சாந்தனை இலங்கைக்கு ஏன் அனுப்பவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சாந்தன் 2022ஆம் ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் காலமானார். சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு கடந்த மாதம் 22ஆம் தேதியை அனுமதி அளித்த போதும், ஏன் அனுப்பவில்லை என தற்போது நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். ஜனவரி 24ஆம் தேதி முதலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தனால் நகரக் கூட முடியவில்லை என தமிழ்நாடு அரசுத்தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இன்று பிற்பகலுக்குள் சாந்தனின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி