மகனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற தந்தை

62பார்த்தது
மகனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற தந்தை
தந்தையே தனது இளைய மகனைக் கொன்ற சம்பவம் தெலங்கானாவின் ஹயத்நகர் காவல்நிலைய பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், யாதாத்திரி புவனகிரி மாவட்டம் சௌட்டுப்பல் மண்டலம் மல்காபுரத்தை சேர்ந்த கலகோனி ஸ்ரீனிவாஸ் கவுட் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஸ்ரீனிவாஸ் கவுடின் மகன் வினய் (28) மது அருந்திவிட்டு பணம் கேட்டு தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ஸ்ரீநிவாஸ், மண்வெட்டியால் வினய்யின் தலையில் அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே வினய் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி