அம்மா உணவகங்களில் ஆய்வு என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு. சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், "ஏழை மக்களுக்கு அம்மா உணவகங்கள் வரப்பிரசாதமாக திகழ்ந்தது. ஆனால், விடியா திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவகங்கள் சரியாக செயல்படவில்லை. முன்பே அறிவித்துவிட்டு அம்மா உணவகங்களில் முதல்வர் சோதனை நடத்துகிறார். 3 வருடங்களாக ஏன் இந்த சோதனையை நடத்தவில்லை?" என கேள்வியெழுப்பியுள்ளார்.