சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2ம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு

57பார்த்தது
சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2ம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் இருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. அதோடு அறிவிக்கப்பட்ட மற்ற 3 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆர்டிஐ சட்டத்தின் மூலம் இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது. 2021-22 நிதிநிலை அறிக்கையில், சென்னையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட கொச்சி, பெங்களூரு, நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகளுக்கான ரூ.63,246 கோடியை ஒதுக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி