சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல்!

14322பார்த்தது
சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல்!
கஞ்சா வைத்திருந்தது மற்றும் காவல்துறையில் பணியாற்றும் பெண்களை ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் அலுவலகத்திலும் அவரது ஓட்டுநர் ராஜரத்தினம் வீட்டிலும் ஒன்றேகால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் நேற்று 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு அடைந்தது. சோதனையின் முடிவில் கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி