ஆண் வேடத்தில் மாமியார் செய்த கொடூரம்!

82529பார்த்தது
அரியலூர் மாவட்டம், வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவி சரோஜா (53). இவர்களுக்கு பிரியா (19) என்ற மகள் இருந்துள்ளார். பிரியாவை அப்பகுதியில் பால் வியாபாரம் செய்துவரும் தமிழரசனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சில நாட்கள் கழித்து நடத்த தகராறில் பிரியாவை தமிழரசன் கொலை செய்துள்ளார். பின்னர் சிறைக்கு சென்ற தமிழரசன் 3 மாதத்தில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த போது, அவரின் மாமியார் சரோஜா ஆண் வேடத்தில் சென்று சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தமிழரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சரோஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி