மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை பாரதிய ஜனதா கட்சி தொடங்கியுள்ளது. "மோடியை தேர்ந்தெடுங்கள்" என்ற பெயரில் 2 நிமிட வீடியோவை
பாஜக வெளியிட்டுள்ளது. ராமர் கோயில் திறப்பு, நிலவில் சந்திரயான் விண்கலம் இறங்கியது உள்ளிட்ட நிகழ்வுகள் பரப்புரையில் இடம்பெற்றுள்ளன.
பாஜக ஐடி பிரிவினர் வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது, உத்தர பிரதேசத்தில் உள்ள
பிரதமர் மோடி இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.