தமிழ் சினிமாவில் குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தோன்றி தனது சகலகலா நடிப்பால் ரசிகர்கள் கவர்ந்தவர் வினு சக்கரவர்த்தி. இன்று (டிச. 15) அவரின் பிறந்தநாள் ஆகும். 35 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் இருந்த அவர் ஆயிரம் படங்களில் நடித்துள்ளார், 'வண்டிச்சக்கரம்' படத்தின் மூலம் நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்திய வினு சக்கரவர்த்தி கடந்த 2017ல் மறைந்தார்.