விஜய் பிறந்த நாள்: உடல் உறுப்பு தானம் செய்த தம்பதி

81பார்த்தது
விஜய் பிறந்த நாள்: உடல் உறுப்பு தானம் செய்த தம்பதி
நடிகரும், தவெக தலைவருமான விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் சென்னாக்குப்பம் ஊராட்சியை சேர்ந்த செல்வம் மற்றும் அவரது மனைவி சுசித்ரா மற்றும் குன்றத்தூர் தவெக நிர்வாகி எஸ்.கே.எஸ். நெப்போலியன் ஆகியோர் உடலுறுப்புகளை தானம் செய்துள்ளனர். தங்கள் மறைவுக்கு பின்னர் உடல் உறுப்புகளை தானமாக எடுக்கலாம் என தாம்பரம் மருத்துவமனையில் பதிவு செய்து கொண்டனர். மேலும் பல ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி