தினமும் 4 மணி நேரத்திற்கு மேல் மொபைல் ஃபோனை பயன்படுத்துபவர்களுக்கு மன உளைச்சல், கண் சம்பந்தமான நோய்கள், தூக்க பிரச்சனைகள், அதீத கவலை, மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள் ஆகியவை வருவதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதின்ம வயதினர் அதிகமாக செல்போனை பயன்படுத்துவதால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. தென்கொரியாவின் ஹன்யாங் பல்கலைக்கழக வல்லுநர்கள் செய்த ஆய்வில் இந்த அதிர்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளன.