திருச்சி - மயிலாடுதுறை ரயிலை பழைய நேரத்தில் இயக்கப்படுமா?

80பார்த்தது
திருச்சி - மயிலாடுதுறை ரயிலை பழைய நேரத்தில் இயக்கப்படுமா?
திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலை மீண்டும் பழைய நேரத்தில் இயக்க வேண்டும் என காவிரி டெல்டா ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் செல்லும் பொது மக்கள், அலுவலர்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கெனவே திருச்சியில் காலை 7. 10 மணிக்கு புறப்பட்டு, மயிலாடுதுறைக்கு 9. 50
மணிக்கு சென்றது. கொரோனா காலத்துக்கு பின்பு இந்த ரயில் காலை 6. 05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு காலை 9 மணிக்கு செல்லும் வகையில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த ரயிலை மீண்டும் பழைய நேரத்தில் இயக்க வேண்டும்.
தஞ்சாவூர் - திருச்சி இடையே இரட்டை அகல ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளதால், ஒரு மணி நேரத்துக்கு ஒரு டெமு ரயிலை இயக்க
வேண்டும் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத் தலைவர் திருமேனி தலைமை வகித்தார். செயலர் வெ. ஜீவக்குமார், நிர்வாகிகள் கண்ணன், உமர்முக்தார், பைசல்அகமது, புலவர் செல்ல கணேசன், ராம. சந்திரசேகரன், பொறியாளர் சாமிதுரை, ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி