காய்கறி மார்க்கெட்டில் குடிநீர் வசதி வியாபாரிகள் கோரிக்கை

64பார்த்தது
காய்கறி மார்க்கெட்டில் குடிநீர் வசதி வியாபாரிகள் கோரிக்கை
தஞ்சை காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டுக்கு தமிழ்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இருந்தும் விற்பனைக்காக காய்கறிகள்
கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் தஞ்சையில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுகிறது இந்த காய்கறி மார்க்கெட்டுக்கு தஞ்சை மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் வாங்க பொது மக்கள் வந்து செல்கின்றனர்.

காமராஜர் காய்கறி மார்க்கெட் புதிதாக கட்டப்பட்டு 2 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தினமும் காய்கறிகள் விற்பனை செய்தும், பொது மக்கள் வாங்கியும் செல்கின்றனர்.
ஆனால் காமராஜர் மார்க்கெட்டில் குடிநீர் வசதி இல்லாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், இங்கு குடிநீர் இல்லாததால் வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்புடைய செய்தி