புகையிலை பொருட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

69பார்த்தது
நாச்சியார் கோயில் கடை வீதியில் காவல்துறை ஆய்வாளர் சுகுணா அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
அதில் எமதர்மராஜன் வேடமணிந்த ஒருவர் மது அருந்துதல் புகையிலை பொருட்கள் உபயோகம் இரண்டு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் இல்லாதது மூன்று பேர் பயணித்தல் நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது போன்றவற்றால் ஏற்படும் தீமைகளை தத்ரூபமாக நடித்து காட்டி விழிப்புணர்வூட்டினார் நிகழ்ச்சி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் பாராட்டும் வகையிலும் இருந்தது நிகழ்ச்சி ஏற்பாடு செய்த காவல்துறை ஆய்வாளர் அவர்கள் மது மற்றும் புகையிலை யினால் ஏற்படும் தீமைகளை விளக்கமாக எடுத்துரைத்தார்கள் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்க நிர்வாகி சாலை பாதுகாப்பு மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகளை கூறினார் இறுதியில் வர்த்தக சங்க செயலாளர் மது கள்ளச்சாராயம் புகையிலை பொருட்கள் போன்ற கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கவும் கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க வலியுறுத்தி னார் இந்த விழிப்புணர்வு கூட்டத்தை ஏற்பாடு செய்த நாச்சியார் கோயில் காவல்துறை க்கு நாச்சியார் கோயில் வர்த்தக சங்கம் சார்பில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூடிய நன்றியை தெரிவித்தார் துணை ஆய்வாளர் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்

தொடர்புடைய செய்தி