பள்ளியில் கட்டடம் இல்லாமல் மரத்தடியில் பயிலும் மாணவர்கள்

81பார்த்தது
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை மருத்துவக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் புதிய கட்டிடம் கட்டுவதாக கூறி கடந்த 6மாதத்திற்கு முன்னர் முற்றிலுமாக இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பள்ளி வகுப்பறை கட்டித் தரப்படாததால் தற்காலிக இடங்களில் பள்ளி செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் தற்காலிகமாக செயல்பட்ட பள்ளி தற்போது அங்கே நெல் கொள்முதல் நிலையம் அமைவதால் அங்கிருந்தும் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளியின் மரத்தடியில் மாணவர்கள் கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் பள்ளியின் இடிக்கப்பட்டு இருந்த வளாகத்தில் மரத்தடியில் மாணவர்கள் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு பின்னர் அங்கேயே அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவியரின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உடனடியாக பள்ளி கட்டிடத்தை கட்டி தர வேண்டும் என்று கூறி தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி