விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

58பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் கடைவீதியில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் முல்லைவளவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படுகொலையில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தலித் தலைவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்
மண்டல செயலாளர் சிவகுமார், திருவாரூர் இடிமுரசு, திருவாரூர் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர்கள் தொல்குடி, அரசமுதல்வன், நெப்போலியன், கரிகாலன், திருவிடைமருதூர்
நகர செயலாளர் தமிழரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவு அணி வெண்மணி, பகுஜன் சமாஜ் கட்சி மாநில துணை செயலாளர் ராஜவேல், திராவிடர் கழக பொறுப்பாளர் ரமேஷ், சோழபுரம் நகர செயலாளர் கரிகாலன், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் பரிதிவளவன், சோமசுந்தரம், திருபுவனம் நகர செயலாளர் அருமைத்துரை, ஆடுதுறை நகர செயலாளர் செந்தமிழ்அரசு, கம்யூனிஸ்ட் நகர செயலாளர் நாகேந்திரன், பறையர் பேரவை அய்யப்பன், முரளி, கராத்தே வாசுதேவன், ஆடுதுறை நகர பொருளாளர் புரட்சிஅரசு, இளங்கோவன், அம்மன்பேட்டை செல்வராஜ், வானாபுரம் சச்சின், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி