மதம் மாற்றம் தொடர்பாக தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் என். ஐ. ஏ இதுவரை 13 நபர்களை கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் ஐந்து நபர்கள் தேடப்படும் குற்றவாளியாக என். ஐ. ஏ அறிவித்தது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் என். ஐ. ஏ அமைப்பினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கருப்பூர் பைசல், மேலக்காவிரி கே. எம். எஸ். நகர் யூசுப், திருபுவனம் இஸ்மாயில் மகன் யூசுப்கான், திருமங்கலக்குடி அன்வர் பாட்ஷா மகன் இம்தியாஸ், அய்யூப்கான் மகன் ஹாலித், ஹனீபா மகன் முகமது ஹாலித் உள்ளிட்டோரின் வீடுகளில் என். ஐ. ஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நாளில் கும்பகோணத்தில் இரண்டு இடங்கள், திருபுவனத்தில் ஒரு இடம், திருமங்கலகுடியில் மூன்று இடம் என ஆறு இடங்களில் ஆறு பிரிவுகளாக என். ஐ. ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.