திருவிடைமருதூர் தொகுதியில் மதிமுக கொடியேற்று விழா

83பார்த்தது
திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் மதிமுக சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது


தஞ்சை வடக்கு மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் 31ஆம் ஆண்டு தொடக்க விழா, திருச்சி நாடாளுமன்ற வெற்றி விழா, கொடியேற்று விழா ஆகிய முப்பெரும் விழா திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 66 பகுதிகளில் மதிமுக கழக துணை பொது செயலாளர் ஆடுதுறை முருகன் தலைமையில் கொடி ஏற்ற விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ரகுராம் கலந்து கொண்டு திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடுதுறை, திருவிடைமருதூர், அணைக்கரை, சூரியனார் கோவில், பந்தநல்லூர், திருப்பனந்தாள், உள்ளிட்ட 66 இடங்களில் மதிமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி