சாலை விபத்தில் விவசாயி பலி

56பார்த்தது
சாலை விபத்தில் விவசாயி பலி
மோட்டார் பைக் மொபட் மோதல் முதியவர் உயிரிழப்பு

கும்பகோணம், ஜூலை 31:

தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே மோட்டார் பைக் மொபட் மீது மோதியதில் முதியவர் உயிரிழந்தார், பந்தநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.

பந்தநல்லூர் காகிதப்பட்டறை அருகே சோழ வளாகத்தில் வசித்தவர் கோவிந்தராஜ் மகன் ராஜாராமன் (77) இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக திங்கள்கிழமை மதியம் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டில் சென்றார். அரசரடி அரவிந்த் மர இழைப்பகம் அருகே செல்லும் போது எதிரே அதிவேகமாக பல்சர் மோட்டார் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ராஜாராமன் மொபட் மீது மோதியதில் பலத்த காயமடைந்தவரை அருகே இருந்தவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

பந்தநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துகிருஷ்ணராஜா செவ்வாய்க்கிழமை வழக்கு பதிந்து உடற்கூறாய்வுக்கு சடலத்தை அனுப்பி, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் பைக்கில் வந்த இளைஞரை தேடிவருகிறார்.

தொடர்புடைய செய்தி