சத்தீஸ்கர் மாநிலத்தில் இயங்கி வரும் மின் உற்பத்தி மையத்தில் ஏற்பட்ட விபத்தில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முங்கேலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையத்தில், சிம்னியை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியின்போது, எதிர்பாராத விதமாக சிம்னி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 9 பேர் உயிரிழந்த நிலையில், 25க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து, அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.