பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2,500 தரப்பட்டது, தற்போது 1,000கூட இல்லை' என அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பினார். இதற்கு அமைச்சர் துரைமுருகன், 2021-ம் ஆண்டு தேர்தல் இருந்தது. அதனால் நீங்கள் ரூ.2,500 கொடுத்தீர்கள். ஆனால், இப்போது தேர்தல் காலம் இல்லை. தேர்தல் வரும்போது பார்க்கலாம்" என்று பதிலளித்தார்.