திருக்காட்டுப்பள்ளி சரக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

65பார்த்தது
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலிலும், காநாடகா பகுதிகளிலும், தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால் மேட்டூர் நீர்மட்டம் கிடு, கிடு, என உயாந்து அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு 117 அடியை எட்டியுள்ளது. ஒரே நாளில் 9 அடி உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் 120 அடியை எட்டிவிடும் இருப்பினும் பல்வேறு இடங்களிலிருந்து அதிகபடியான கனமழை பெய்து வருவதால் அணைக்கு வினாடிக்கு ஒருச்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேல் தண்ணீர் வந்து கொண்டு உள்ளதால் வரும் உபரி நீர் அனைத்தையும் வெளியேற்றித்தான் ஆகவேண்டும், மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் முழுவதும் கொள்ளிடத்தில் திறந்துவிடப்படுகின்றது. இதனால் கரையோர பகுதி மக்களும், தாழ்வான பகுதி யில் வசிக்கும்மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, வானராங்குடி, கூத்தூர், விட்டலபுரம், ஆகிய பகுதிகளுக்கு பூதலூர் தாசில்தார் மரிய ஜோசப், திருக்காட்டுப்பள்ளி ஆர். ஐ. சிவசங்கர் கிராம நிர்வாக அலுவலர் பாஸ்டீன், சரவணன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் ஒலிபெறுக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வ ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி