பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனில் உலக மகளிர் தின விழா

558பார்த்தது
பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் பயணிகள் சங்க சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சரவணன் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். விழாவில் மத்திய மாநில அரசுகளில் சிறப்பாக பணிபுரிந்த சாதனை படைத்த பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், கும்பகோணம் ரயில்வே போலீஸ்  சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, பாபநாசம் தலைமை அஞ்சலக பெண் போஸ்ட்மேன் ரேவதி,   கல்லூரி பேருந்து பெண் ஓட்டுநர் ஜெமிலாக்கனி, ரயில் நிலைய அலுவலர்கள் ரவீந்திரன், அஞ்சு , பெண் ஊழியர் புஷ்பம் அவர்களை பாராட்டி பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் விழாவில் அனைவரும் வாழ்த்துரை வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் ஆறுமுகம், சம்பந்தம், பாண்டியன், கணேசன், பாபநாசம் ரயில் பணிகள் சங்க பொறுப்பாளர்கள் சோமநாத ராவ், சாமிநாதன்,   சிவக்குமார், மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி