திருவையாறில் இலவச கண் மருத்துவ முகாம்

64பார்த்தது
திருவையாறில் இலவச கண் மருத்துவ முகாம்
திருவையாறில் இலவச கண் மருத்துவ முகாம்

திருவையாறு ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி; பள்ளி வளாகத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்துகொண்ட 176 பேருக்கு டாக்டர் சாய்னா மற்றும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 110 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ரோட்டரி கிளப் தலைவர் யூஜின்ராஜ் தலைமை வகித்தார். இதில் சாசன உறுப்பினர் அமர்சிங், முன்னாள் உதவி ஆளுநர் குப்புவீரமணி, மண்டலம் 2 உதவி ஆளுநர் கருணா கண் சிகிச்சை முகாம் அமைப்பாளர் ராமகிருஷ்ணன் முன்னாள் தலைவர்கள் குமரவேல் கோடீஸ்வரன், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை திருவையாறு ரோட்டரி சங்கம் மற்றும் திருவையாறு கண்டியூர் பாவா மெடிக்கல் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி